அதிபர் தேர்தலுக்கு முன்கூட்டியே ஓட்டுப் போட்டார் ஒபாமா

   அதிபர் பதவிக்கான தேர்தலில், முன்கூட்டியே வாக்களிக்கும் வாய்ப்பை பயன்படுத்தி, அமெரிக்க அதிபர் ஒபாமா இன்று அதிகாலை தனது வாக்கை பதிவு செய்தார்.
அமெரிக்க அதிபர் ஒபாமா தனது தீவிர பிரசாரத்துக்கு சற்று இடைவெளி அளித்து, சிகாகோவில் உள்ள மார்டின் லுதர் கிங் சமூக மையத்துக்கு வாக்களிக்க வந்தார்.
அங்கு வாக்குச்சாவடி அதிகாரியிடம், தனது ஓட்டுநர் உரிமத்தை காண்பித்து, ஒபாமா வாக்களித்தார். தேர்தல் தினத்தன்று மோசமான வானிலை அல்லது பனிமூட்டம் உள்பட பல்வேறு சிரமங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால், முன்கூட்டியே வாக்களிக்கும் வாய்ப்பை பயன்படுத்தும்படி அவர் வாக்காளர்களை கேட்டுக் கொண்டார். அதிபர் பதவியில் இருக்கும் ஒருவர் தேர்தல் தினத்துக்கு முன்பாக வாக்களிப்பது இதுவே முதல் முறை.
  
ராம்னிக்கு அதிகரிக்கும் ஆதரவு :  அதிபர் தேர்தலில் ஒபாமா முன்கூட்டியே வாக்களித்திருக்கும் நிலையில், நேற்று வெளியான கருத்து கணிப்பு மிட் ராம்னிக்கு ஆதரவு அதிகரித்திருப்பதாக தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் பிரபல நாளிதழ், The Washington Post நடத்திய கருத்துக்கணிப்பில், ராம்னிக்கு 50 சதவீதமும், ஒபாமாவிற்கு 47 சதவிதமும் அதரவு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Ohio, Nevada, Virginia மற்றும்  Florida வில் ராம்னிக்கு ஆதரவு அதிகரித்துள்ளதாக கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்கள் மத்தியில் ராம்னிகு ஆதரவு அதிகரித்துள்ளதாகவும் The Washington Post கூறியுள்ளது. ஆனால் இதனை ஒபாமா ஆதரவாளர்கள் திட்டவட்டமாக மறுத்துள்ளர்.
                                                                 -பசுமை நாயகன்.