தமிழக அமைச்சர் கோகுல இந்திரா பற்றி தவறான செய்தி கருணாநிதி நேரில் ஆஜராக சம்மன்

         தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் கோகுல இந்திரா தொடர்ந்த அவதூறு வழக்கில் திமுக தலைவர் கருணாநிதி நேரில் ஆஜராக சம்மன் அனுப்புமாறு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக அமைச்சர் கோகுல இந்திரா  பற்றி தவறான செய்தி வெளியிட்டதாக திமுக தலைவர் கருணாநிதி மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது. அதில் ஆகஸ்ட் 23ஆம் தேதி முரசொலி நாளிதழில் கோகுல இந்திராவின் கணவரே அமைச்சரின் அரசு பணிகளை செய்வதாக செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
அதனால், முரசொலி நாளிதழின் ஆசிரியர் செல்வம் மற்றும் திமுக தலைவர் கருணாநிதி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. அந்த வழக்கை இன்று விசாரித்த சென்னை முதன்மை நீதிமன்ற நீதிபதி பொன்.கலையரசன் கருணாநிதி வரும் டிசம்பர் 18ஆம் தேதி நேரில் ஆஜராக சம்மன் அனுப்ப உத்தரவிட்டார். திமுக தலைவர் கருணாநிதி மீது மொத்தம் 6அவதூறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
-சத்திஷ் K.K.K.nagar