போக்குவரத்துக் கழகங்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பை அரசே ஏற்கும் முதல்வர் அறிவிப்பு

     டீசல் விலை உயர்வால் போக்குவரத்துக் கழகங்களுக்கு ஏற்பட்டுள்ள 206 கோடியே 83 லட்சம் ரூபாய் இழப்பை அரசே ஏற்கும் என தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
தமிழக அரசின் செய்தி குறிப்பில் , கடந்த செப்டம்பர் மாதம் டீசல் விலை உயர்த்தப்பட்டதால் அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு ஆண்டென்றுக்கு 381 கோடியே 81 லட்சம் ரூபாய் கூடுதலாக செலவாகிறதாக கூறப்பட்டுள்ளது.
இந்த கூடுதல் செலவை சரிகட்ட வேண்டுமானால் அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் பேருந்து கட்டணத்தை உயர்த்த வேண்டும்.
ஆனால் பொது மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த நிதி ஆண்டில் அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு ஏற்பட்டுள்ள 206 கோடியே 83 லட்சம் ரூபாய் இழப்பை அரசே ஏற்கும் என்று தமிழக தெரிவிக்கப் பட்டுள்ளது.