ஆதரவு கட்சியினருக்கு பிரதமர் மன்மோகன் சிங் விருந்து

       த்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு ஆதரவு அளித்து வரும் சமாஜ்வாதி கட்சி மற்றும் தேசிய மாநாட்டு கட்சி ஆகியவற்றின் தலைவர்களுக்கு பிரதமர் மன்மோகன் சிங் விருந்தளித்தார்.
டெல்லியில் நடைபெற்ற விருந்தளிப்பு நிகழ்ச்சியில் முலாயம் சிங், அவரது மகனும் உத்தரபிரதேச முதலமைச்சருமான அகிலேஷ் யாதவ், உமர் அப்துல்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர். வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் பல்வேறு பிரச்னைகளை எழுப்பி  மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்க எதிர்க்கட்சிகள் ஆயத்தமாகி வருவதால்,  அதனை சமாளி்ப்பது குறித்து காங்கிரஸ் வியூகம் வகுத்து வருகிறது.
மத்திய அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்து வரும் சமாஜ்வாதி  கட்சி, சில்லரை வணிகத்தில் நேரடி அன்னிய முதலீட்டை எதிர்ப்பதால், அநத கட்சியையும் சமாளிக்க வேண்டிய சிக்கல் காங்கிரசுக்கு ஏற்பட்டுளளது. உத்தரபிரதேசத்தில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களுக்கு கூடுதல் நிதி கோரும் நோக்கில் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ், பிரதமரின் விருந்தில் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.

-இணைய செய்தியாளர் -சத்திஷ் K.  K.K.nagar