சீனாவின் புதிய அதிபர்: இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு

      சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் இன்று நிறைவுபெறும் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் அந்நாட்டின் புதிய அதிபராக ஜி ஜின்பிங் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுகிறார்.
ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு நடத்தப்படுகிறது. ஆனாலும், கடந்த 8-ம் தேதி தொடங்கிய இந்த 18வது மாநாடு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த மாநாட்டில் கலந்து கொண்டுள்ள பிரதிநிதிகள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் ரகசிய வாக்குப்பதிவு முறையில், அடுத்த பத்து ஆண்டுகளுக்கு சீனாவை ஆட்சி செய்யவுள்ள மத்தியக் குழுவை தேர்வு செய்வர். இதில், தற்போது துணை அதிபராக உள்ள ஜின் பிங், அடுத்த அதிபராகவும், துணை பிரதமராக உள்ள லீ கெகியாங் அடுத்த பிரதமராகவும் தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும், தேர்தல் நடைமுறைகளிலும் மாற்றங்கள் செய்வதற்கான முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.