ஈவிகேஎஸ் இளங்கோவன் மீது அவதூறு வழக்கு

    ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மீது தமிழக அரசு அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளது. புதிய தலைமுறை தொலைக்காட்சியின் நேர்படப்பேசு நிகழ்ச்சியில் ஈவிகே எஸ் இளங்கோவன் பங்கேற்று பேசிய போது, முதலமைச்சர் ஜெயலலிதாவை பற்றி அவதூறான கருத்துகளை கூறியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முதலமைச்சர் சார்பில் அரசு வழக்கறிஞர் வழக்கு பதிவு செய்துள்ளார். அதில், இளங்கோவனின் கருத்துகள் முதல்வரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.