பால் தாக்கரே விரைவில் குணமடைவார் உத்தவ் தாக்கரே

   சிவவேனா கட்சி தலைவர் பால் தாக்கரேவின் உடல் நலம் குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் என அவரது மகன் உத்தவ் தாக்கரே வேண்டுகோள் விடுத்துள்ளார். பால் தாக்கரே, சுவாச கோளாறு காரணமாக கடந்த சில மாதங்களாக அவதிப்பட்டு வருகிறார். தற்போது மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பால் தாக்கரேவின்,  உடல் நிலை  மிகவும் மோசமடைந்துள்ளதாகவும்,  அவரால் எந்த உணவும் உட்கொள்ள முடியவில்லை என்றும் கூறப்படுகிறது.   ஆனால் அவரது உடல் நலம் குறித்து வெளியாகி வரும் தகவல்கள் உண்மையில்லை என்று அவரது மகன் உத்தவ் தாக்ரே கூறியுள்ளார்.
தாக்கரேவின் வீட்டின் முன்பு பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் கூடியுள்ளனர். இதையடுத்து,  அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
-சத்தீஷ்