குஜராத் தேர்தல் : 70 சதவீத வாக்குப் பதிவு


             குஜராத் சட்டப்பேரவைக்கான இரண்டாம் கட்ட தேர்தலில் 70% வாக்குகள் பதிவானது.
குஜராத் மாநிலம் சட்டசபைக்கான தேர்தல் இரண்டு கட்டங்களாக டிசம்பர் 13 மற்றும் 17-ம் தேதிகளில் நடைபெறும் என மத்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 13-ந் தேதி 87 சட்டசபை தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது.
இந்நிலையயில் இரண்டாம் கட்ட தேர்தல் இன்று நடைபெற்றது. இதில் மொத்தம் 95 சட்டமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்தது.
இதில் 70 விழுக்காடு வாக்குப்பதிவு நடந்ததாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இரண்டு கட்டங்களாக நடைபெற்ற தேர்தல் வாக்குப்பதிவுகள் வரும் 20 ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே வாக்கு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன