நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்ட பா.ஜ.க. வலியுறுத்தல்

        மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை தொடர்ந்து வெடித்துள்ள போராட்டத்தால், டெல்லியில் நிலவும் சட்டம் ஒழுங்கு குறித்து விவாதிக்க நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று பாரதிய ஜனதா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக, செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் பிரகாஷ் ஜாவேத்கர், டெல்லியில் தற்போது நடைபெற்று வரும் போராட்டம் மத்திய அரசுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த மத்திய அரசு தவறி விட்டதாகவும் பிரகாஷ் ஜாவேத்கர் தெரிவித்துள்ளார்.