ஹிமாச்சல் முதல்வராக வீர்பத்ரசிங் இன்று பதவியேற்


  ஹிமாச்சல் பிரதேசத்தில் காங்கிரஸ் வெற்றிபெற்றதன் மூலம் அக்கட்சியின் வீர்பத்ர சிங் இன்று முதலமைச்சராக பதவியேற்கிறார்.ஏற்கனவே 5 முறை மாநிலத்தின் முதலமைச்சராக இருந்திருக்கும் வீர்பத்ரசிங்கிற்கு ஆளுநர் ஊர்மிளா சிங் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். இவருடன் மேலும் சிலர் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பதவியேற்பு விழா நடைபெறும் சிம்லாவிலுள்ள வரலாற்று புகழ்மிக்க ரிட்ஜ் மைதானத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
68 தொகுதிகளை கொண்ட ஹிமாச்சல் பிரதேச சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் 36 இடங்களை காங்கிரஸ் கைப்பற்றி ஆட்சியை பிடித்துள்ளது.
78 வயதான வீர்பத்ரசிங், மக்களவை உறுப்பினராகவும் தேர்வுபெற்று மத்திய அமைச்சராகவும் இருந்தவர். இதனிடையே வீர்பத்ர சிங் மீதான ஊழல் வழக்கை விசாரித்துவந்த சிம்லா சிறப்பு நீதிமன்றம், வழக்கில் இருந்து அவரை விடுவித்து தீர்ப்பளித்துள்ளது.
-பசுமை நாயகன்