மோதி இன்று பதவியேற்பு: தமிழக முதல்வர் ஜெயலலிதா பங்கேற்பு

              குஜராத் மாநிலமுதலமைச்சராக நான்காவது முறையாக, நரேந்திர மோதி இன்று பதவியேற்கிறார். இன்று காலை 11 மணியளவில் நடைபெறும் பதவியேற்பு விழாவில், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, பாரதிய ஜனதாவின் மூத்த தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.
இன்று பதவியேற்றதும், டெல்லியில் நாளை நடைபெறும் தேசிய வளர்ச்சிக் கவுன்சில் கூட்டத்தில் நரேந்திர மோதி கலந்து கொள்கிறார்.
முன்னதாக, நேற்று காந்தி நகரில் நடைபெற்ற பாரதிய ஜனதா எம்எல்ஏக்கள் கூட்டத்தில், மோதி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, பின்னர் குஜராத் மாநில ஆளுநர் கமலா பெனிவால், ஆட்சி அமைக்குமாறு நரேந்திர மோதிக்கு அழைப்பு விடுத்தார். 182 உறுப்பினர்களைக் கொண்ட குஜராத் சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில், பாரதிய ஜனதா 115 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது.

-பசுமை நாயகன்