மாணவி உயிரிழந்ததற்கு பிரதமர் மன்மோகன்சிங் இரங்கல்

             பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மாணவி உயிரிழந்ததற்கு பிரதமர் மன்மோகன்சிங் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், பாலியல் வன்கொடுமை இனியும் தொடராத வண்ணம் நடவடிக்கை எடுப்பதை உறுதிசெய்ய வேண்டும் என கூறியுள்ளார். இந்த விவகாரத்தில் நாடு தழுவிய அளவிலான எழுச்சியைப் பார்த்துவிட்டதாக கூறியுள்ள பிரதமர், சட்டத்தில் மாற்றம் கொண்டுவருவதை இளைஞர்கள் விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
பாலியல் வன்கொடுமை தொடராதபடி ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுப்பதே உயிரிழந்த மாணவிக்கு நாம் செலுத்தும் உண்மையான நினைவஞ்சலி என்றும் பிரதமர் மன்மோகன்சிங் குறிப்பிட்டுள்ளார்.
பெண்கள் பாதுகாப்பாக வாழும் சூழலை உருவாக்க தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை புறந்தள்ளிவிட்டு அரசியல் கட்சிகளும் மக்களும் ஒத்துழைக்க வேண்டும் என பிரதமர் கோரிக்கை விடுத்துள்ளார்.