மதுபானக்கடையை மூட வலியுறுத்தி மமக முற்றுகைப் போராட்டம்

              சென்னை பாரிமுனையில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையை மூட வலியுறுத்தி, மனித நேய மக்கள் கட்சி சார்பில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தியும், மதுபான விற்பனையை ஊக்குவிக்கும் மாநில அரசைக் கண்டித்தும் போராட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மேலும், பாரதி மகளிர் கல்லூரி அருகே இருக்கும் டாஸ்மாக் மதுபானக்கடையை போராட்டக்காரர்கள் முற்றுகையிட முயன்றனர்.
அவர்களை போலீசார் கைது செய்தனர். தமிழகத்தில் அமைந்துள்ள பெரும்பாலான மதுபானக் கடைகள் கல்லூரிகள், பள்ளிகள் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளிலேயே அமைந்துள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம் சாட்டினர்.
-பசுமை நாயகன்