முதலமைச்சர் ஜெயலலிதா தன்னிச்சையாக செயல்படுவதாக திமுக தலைவர் கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார்.

    காவிரி பிரச்சனையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி ஆலோசிக்காமல், முதலமைச்சர் ஜெயலலிதா தன்னிச்சையாக செயல்படுவதாக திமுக தலைவர் கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிடும் விவகாரத்தில் திமுக கபட நாடகம் ஆடுவதாக முதலமைச்சர் ஜெயலலிதா கூறியிருப்பதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை அரசிதழில் வெளியிட வேண்டும் எனத் தாம் வெளிப்படையாக வேண்டுகோள் விடுத்த அதே நாளில், திமுக எம்பிக்கள் பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்தியதாக கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2007ம் ஆண்டு காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு வெளியான போது அதனைத் தமிழகத்திற்கு பாதகமானது என ஜெயலலிதா கூறியதாகத் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
அப்படிப்பட்டவர் தற்போது அதனை அரசிதழில் வெளியிட வேண்டும் எனக் கடிதம் எழுதும் முரண்பாட்டைத் தாம் சுட்டிக்காட்டியதில் தவறில்லை என்றும் கருணாநிதி தெரிவித்துள்ளார்.