அந்நிய நேரடி முதலீடு: மத்திய அரசுக்கு மீண்டும் வெற்றி

                 சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் விவகாரத்தில், மாநிலங்களவையில் நடைபெற்ற வாக்கெடுப்பில் மத்திய அரசு வெற்றி பெற்றது.
சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிக்கக்கூடாது என வலியுறுத்தி அ.தி.மு.க., தீர்மானம் நிறைவேற்றியது. தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெற்றது. வாக்கெடுப்பில் மத்திய அரசு வெற்றி பெற்றுள்ளது. ஏற்கனவே மக்களவையில் நடைபெற்ற வாக்கெடுப்பிலும் மத்திய அரசு வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக மாநிலங்களவையில் நடைபெற்ற விவாதித்திற்கு விளக்கமளித்த மத்திய அமைச்சர் ஆனந்த் ஷர்மா :சில்லறை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீ்ட்டை அனுமதிப்பது தொடர்பாக பீகார், மேற்குவங்கம், பஞ்சாப் உள்ளபட 14 மாநில முதல்வர்களிடம் மத்திய அரசு கருத்து கேட்டதாக அவர் தெரிவித்தார். மேலும் 11 மாநிலங்களில் விவசாயிகள் மற்றும் வணிகர்கள் நேரடி அந்நிய முதலீட்டிற்கு ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் கூறினார்.
ஆனால் அமைச்சர் ஆனந்த் ஷர்மா விளக்கத்தை ஏற்க மறுத்து பா.ஜ.க.,வினர் அமளியில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து அவையை பிற்பகல் 2.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
மீண்டும் அவை கூடியதும் வாக்கெடுப்பு தொடங்கியது. வாக்கெடுப்புக்கான அறிவிப்பு வந்ததும் சமாஜ்வாதி கட்சியினர் வெளிநடப்பு செய்தன