கர்நாடகத்திடம் மத்திய அரசு பணிகிறது: வைகோ

         காவிரி நதிநீர் விஷயத்தில் கர்நாடகாவிற்கு சாதகமாகவும் தமிழகத்திற்கு பாதகமாகவும் மத்திய அரசு செயல்படுவதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.
அந்தந்த மாநிலங்களில் உள்ள நீர்த்தேக்கங்கள் குறித்த உரிமை அந்தந்த மாநிலங்களுக்கே உண்டு என கூறும் அணை பாதுகாப்பு மசோதா சட்டமாக்கப்படுமானால், தமிழகம் கடுமையாக பாதிக்கப்படும் என்றார் அவர்.
மேலும், காவிரி நதி நீர் ஆணையத்தின் இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிட மத்திய அரசு வேண்டும் என்றே காலம் தாழ்த்தி வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.