காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டிருப்பது மிகப்பெரிய கவுரவம்


    அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டிருப்பது, தனக்கு அளிக்கப்பட்ட மிகப்பெரிய கவுரவம் என ராகுல்காந்தி கூறியுள்ளார்.
   காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக அறிவிக்கப்பட்ட பின்னர், சிந்தனை அமர்வுக் கூட்டத்தில் பேசிய அவர், தமது வளர்ச்சிக்கு உதவிய அனைவருக்கும நன்றி தெரிவித்துக் கொண்டார்.
  பிரதமர் மன்மோகன் சிங்கின் தலைமையில் ஆர்டிஐ, ஆதர், போன்ற திட்டங்கள் மூலம் இந்தியா மாபெரும் வளர்ச்சிப் பாதையில் சென்றுக் கொண்டிருப்பதாக ராகுல்காந்தி கூறினார்.பெண்கள் மற்றும் இளைஞர்கள் மீது அதிக கவனம் செலுத்த வேண்டியிருப்பதாகவும் ராகுல் காந்தி தெரிவித்தார்.
   உணவு பாதுகாப்பு மசோதா போன்றவற்றின் மூலம், இரவில் யாரும் பட்டினியாக தூங்க செல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் ராகுல்காந்தி கூறினார்.
  மேலும், காங்கிரஸில் உட்கட்சி பூசலில் ஈடுபடுவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அவர்களது செய்யும் பணியை பொருத்தே அவர்கள் மதிப்பிடப்படுவார்கள் என்றும் தெரிவித்தார். நாட்டில் ஜனநாயகம் நிலைத்திருக்க, அனைவரும் குரல் கொடுக்க வேண்டும் என்றும் ராகுல் காந்தி கேட்டுக்கொண்டார்.
                                    -இணைய செய்தியாளர் - s.குருஜி