எடியூரப்பாவும் அவருடைய ஆதரவாளர்கள் 200 பேரையும்
   ச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி காவிரி நீர் திறந்து விடப்பட்ட நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா, கிருஷ்ணராஜசாகர் அணையை முற்றுகையிடும் முயற்சியில் ஈடுபட்டார்.
  இதனையடுத்து கிருஷ்ணராஜ சாகர் அணைப் பகுதியில் கர்நாடக அரசு 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்நிலையில் கிருஷ்ணராஜ சாகர் அணையை முற்றுகையிட எடியூரப்பா, தனது ஆதரவாளர்களுடன் அணையை நோக்கி பயணித்து வந்தார்.அணையை முற்றுகையிட சென்ற எடியூரப்பாவும் அவருடைய  ஆதரவாளர்கள் 200 பேரையும் போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
  தமிழகத்திற்கு கர்நாடகா 2 புள்ளி 44 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் நேற்று முன்தினம் உத்தரவிட்டது. இதனையடுத்து, கர்நாடகத்திற்கு அநீதி இழைக்கப்பட்டுவிட்டதாக கூறிய கர்நாடக ஜனதா கட்சியின் தலைவரான எடியூரப்பா, தனது அரசை தியாகம் செய்ய பாரதிய ஜனதா கட்சி முன்வர வேண்டும் என்று தெரிவித்தார்.
  தமது கோரிக்கையை வலியுறுத்தி மைசூரில் இருந்து பெங்களூருவிற்கு நடைபயணம் மேற்கொண்டு வரும் அவர், தற்போது மாண்டியா மாவட்டத்தில் உள்ளார். இந்நிலையில், மாண்டியா மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர் இன்று காலை உத்தரவிட்டார்.
  கர்நாடக அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, வேறு சில கன்னட அமைப்புகளும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன.
                                                      -பசுமை நாயகன்