ஊழல்களுக்கு முற்றுப்புள்ளி என்று சோனியா காந்தி கூறியுள்ளார்.


   மத்திய அரசின் 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் நடைபெறுவதாகக் கூறப்படும் ஊழல்கள் மற்றும் நிதி மோசடிகளை முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார்.
  ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் கனவுத் திட்டமான 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தை மேலும், வலுவுள்ளதாக மாற்ற தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.டெல்லியில் இன்று 100 நாள் வேலைவாய்ப்புத் திட்ட தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் அதனை இதனை தெரிவித்தார்.
   100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய 7 பேருக்கு விருது வழங்கப்பட்டது. தமிழகத்தில் திருச்சி மற்றும் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சி தலைவர்களுக்கும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
                                          -இணைய செய்தியாளர் - s.குருஜி