மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என பாரதிய ஜனதா வலியுறுத்தியுள்ளது.


  2ஜி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவருக்கு சிபிஐ தரப்பு வழக்கறிஞர் ஏ.கே.சிங், உதவியது தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என பாரதிய ஜனதா வலியுறுத்தியுள்ளது.
  ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பான வழக்கு டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட யுனிடெக் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சஞ்சய் சந்திராவுக்கு, சிபிஐ சார்பாக ஆஜரான வழக்கறிஞர் ஏ.கே. சிங், உதவியதாக புகார் எழுந்தது.
  இது குறித்து விசாரித்த சிபிஐ , 2G வழக்கு விசாரணை தகவல்களை சஞ்சய் சந்திராவுடன், ஏ.கே.சிங் பகிர்ந்து கொண்டதை கண்டறிந்தது. மேலும், ஸ்பெக்ட்ரம் விசாரணை குறித்து பாட்டியாலா நீதிமன்ற தலைமை நீதிபதிக்கும், சட்ட அமைச்சகத்திற்கும் சிபிஐ கடிதம் எழுதியதையடுத்து வழக்கறிஞர் ஏ.கே.சிங் நீக்கப்பட்டார்.
  ஸ்பெக்ட்ரம் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக மத்திய அரசு செயல்படுகிறதோ என சந்தேகம் எழுந்துள்ளதாக பாரதிய ஜனதா குற்றம் சாட்டியுள்ளது.