கருணாநிதிக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் சம்மன்


   தமிழக அரசு சார்பில் தொடரப்பட்ட அவதூறு வழக்கில் நேரில் ஆஜராகுமாறு திமுக தலைவர் கருணாநிதிக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் சம்மன் அனுப்பி உத்தரவிட்டுள்ளது.
  இதுதொடர்பான 11 வழக்குகளை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி பொன் கலையரசன் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். முரசொலி நாளிதழில் தமிழக அமைச்சர் குறித்து அவதூறாக எழுதியதாகக் கூறி திமுக தலைவர் கருணாநிதி, முரசொலி ஆசிரியர் செல்வம் ஆகியோர் ஏப்ரல் 29-ம் தேதி நேரில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
  இதேபோல், அரசு விளம்பரம் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஏப்ரல் 26-ம் தேதி நேரில் ஆஜராகும்படி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
  காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.ஸ் இளங்கோவன், தினமலர் மற்றும் நக்கீரன் ஆசிரியர்களுக்கும் அவதூறு வழக்குகள் தொடர்பாக நேரில் ஆஜராக சம்மன் பிறப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
                                                    -இணைய செய்தியாளர் - s.குருஜி