ராஜபக்சேவின் இந்திய வருகைக்கு எதிர்ப்பு மு.க.ஸ்டாலின்


  ராஜபக்சேவின் இந்திய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து டெசோ அமைப்பின் சார்பில் நாளை மறுதினம் நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மு.க.ஸ்டாலின் தலைமை ஏற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 இந்தியாவுக்கு வருகை தரும் இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு எதிர்ப்பு எதிர்ப்பு தெரிவிப்பது என நேற்று முன்தினம் நடைபெற்ற டெசோ கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 அதன்படி சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளைமறுதினம் காலை 10 மணி அளவில் கறுப்புடை அணிந்து மாபெரும் கண்டன போராட்டம் நடைபெறும் என திமுக கழகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
 திராவிடர் கழக தலைவர் கீ.வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சு.ப.வீரபாண்டியன், திருமதி சுப்புலட்சுமி ஜெயதீசன் ஆகிய டொசோ அமைப்பின் உறுப்பினர்களும் பங்கேற்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
 திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் கறுப்பு உடை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
                                 -இணைய செய்தியாளர் - s.குருஜி