தேர்தலுக்கு பின்னர் சமாஜ்வாதி கட்சிக்கு இறுதி ஊர்வலம் நடத்தப்படும் :பேனி பிரசாத் வர்மா    ரும் பொதுத்தேர்தலில், சமாஜ்வாதி கட்சிக்கு 4 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என மத்திய எஃகுத் துறை அமைச்சர் பேனி பிரசாத் வர்மா கடுமையாக விமர்சித்துள்ளார். தேர்தலுக்கு பின்னர் சமாஜ்வாதி கட்சிக்கு இறுதி ஊர்வலம் நடத்தப்படும் எனவும் அவர் சாடியுள்ளார்.
   சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங்குக்கு, தீவிரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாக பேனி பிரசாத் வர்மா அண்மையில் தெரிவித்த கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த பேச்சுக்கு பேனி பிரசாத் பின்னர் வருத்தம் தெரிவித்தார்.
   பிறகு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை ஆதரிக்க சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் கமிஷன் பெற்றதாக பேனி பிரசாத் வர்மா மீண்டும் விமர்சித்தார். தனது குடும்பத்தின் நலனுக்காகவே மட்டும் பாடுபடும் முலாயம் சிங்கை எவ்வாறு பொதுவுடைமைவாதியாக கருத முடியும் எனவும் பேனி பிரசாத் வர்மாக அண்மையில் கேள்வி எழுப்பியிருந்தார்.
   முலாயம் சிங்கை, மத்திய அமைச்சர் பேனி பிரசாத் வர்மா தொடர்ந்து விமர்சித்து வருவதால், காங்கிரஸ் - சமாஜ்வாதி கட்சி இடையிலான உறவில் மேலும் விரிசல் ஏற்படக்கூடும் கருதப்படுகிறது.