ரயில் அமைச்சர் பதவியில் இருந்து பன்சால் நீக்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


   த்திய சட்ட அமைச்சர் பதவியிலிருந்து அஸ்வனி குமார் மாற்றப்படுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அஸ்வனி குமார் இலாகா மட்டும் மாற்றப்படலாம் என்றும், ரயில் அமைச்சர் பதவியில் இருந்து பன்சால் நீக்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இன்று காலை பிரதமரைச் சந்தித்த அஸ்வனி குமார், தம் மீதான புகார் குறித்து விளக்கமளித்தார். பின்னர் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் வாகன்வதியுடன் பிரதமர் முக்கிய ஆலோசனை நடத்தினார். அப்போது சிபிஐ.க்கு உச்சநீதிமன்றம் தெரிவித்த கண்டனம் குறித்து விவாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் பிரணப் முகர்ஜியை சந்தித்த பிரதமர் மன்மோகன்சிங், அஸ்வனிகுமாரை அமைச்சரவையிலிருந்து நீக்குவது குறித்து ஆலோசித்ததாக டெல்லி வட்டாரத் தகவல் தெரிவிக்கின்றது.
மேலும் உச்சநீதிமன்றத்தின் கண்டனம் குறித்தும் குடியரசுத் தலைவரிடம் பிரதமர் விளக்கம் அளித்ததாக தெரிகிறது. இந்நிலையில், இன்றிரவு நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், ரயில்வே அமைச்சர் பவன்குமார் பன்சல் கலந்து கொள்ளவில்லை. சட்ட அமைச்சர் அஸ்வனி குமார் கலந்து கொண்டார். இதனால், அஸ்வனி குமாரின் இலாகா மாற்றப்படலாம் என்று கூறப்படுகிறது. எனினும், பன்சலிடம் இருந்து பதவி பறிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.