நரேந்திர மோதி வேண்டுகோள்


 
பதவி விலகலை அத்வானி திரும்ப பெற பாரதிய ஜனதா கட்சியின் பிரசாரக் குழு தலைவராக உள்ள குஜராத் மாநில முதலமைச்சர் நரேந்திர மோதி வேண்டுகோள் விடுத்தார்.
பாரதிய ஜனதா கட்சிப் பொறுப்புகள் அனைத்தையும் அக்கட்சியின் மூத்த தலைவர் அத்வானி ராஜினாமா செய்துள்ளார். பா.ஜ.க., ஆட்சி மன்றக் குழு, தேர்தல் குழு, செயற்குழு ஆகியவற்றில் இருந்தும் அவர் விலகியுள்ளார். பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங்கிடம் ராஜினாமா கடிதத்தை அத்வானி வழங்கினார். இனி கட்சியின் அடிப்படை உறுப்பினராக மட்டுமே அவர் இருப்பார்.
ஆனால் அவரின் ராஜினாமாவை ஏற்கவில்லை என அக்கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங், டுவிட்டரில் கருத்து வெளியிட்டுள்ளார். இதற்கிடையில் அத்வானியை சமாதானப்படுத்தும் முயற்சியில் அக்கட்சியின் தலைவர்கள் ராத்நாத் சிங், சுஷ்மா, வெங்கையா நாயுடு உள்ளிட்டோர் தொடர்ந்து அவரை சந்தித்து வருகின்றனர்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு பாரதிய ஜனதா கட்சியின் பிரசாரக் குழு தலைவராக உள்ள குஜராத் மாநில முதலமைச்சர் நரேந்திர மோதி, பாரதிய ஜனதா மூத்த தலைவர் அத்வானியுடன் தொலைபேசியில் பேசினார். அப்போது அவர் பதவி விலகலை திரும்ப பெற வேண்டுகோள் விடுத்தார்.