அரசுக்கு வெற்றி கிடைத்துள்ளதால் பொறாமை:


      என்எல்சி பங்குகளை தமிழக அரசின் பொதுத் துறை நிறுவனங்கள் வாங்கும் முடிவை திமுக தலைவர் கருணாநிதி விமர்சித்திருப்பது, அவரது ஆதங்கத்தை வெளிப்படுத்துவதாகவே உள்ளது என முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
   இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், என்எல்சி பங்குகளை தமிழக அரசு வாங்கும் முடிவு, சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட சிறந்த முடிவு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
   தமிழக அந்த யோசனையைத் தாம் தெரிவிக்காமல் இருந்திருந்தால், என்எல்சி பங்குகளை மத்திய அரசு தனியாருக்கு விற்பனை செய்திருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
    பொதுத்துறை நிறுவனங்களின் 10 சதவீத பங்குகள் பொதுப்பங்காக இருக்க வேண்டும் என்ற விதியை 2010 ஆம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்தபோது மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருந்த கருணாநிதி அமைதியாக இருந்தது ஏன் என்றும் ஜெயலலிதா கேள்வி எழுப்பி உள்ளார்.
   இந்த விவகாரத்தில் தமிழக அரசுக்கு கிடைத்த வெற்றியைப் பொறுக்க முடியாமல் கருணாநிதி பேசிவருவதாக ஜெயலலிதா கூறியுள்ளார்.