பா.ஜ.க.வில் இணைந்தார் சுப்பிரமணியசாமி

பா.ஜ.க.வில் இணைந்தார் சுப்பிரமணியசாமி

     ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி பாரதிய ஜனதா கட்சியில் இன்று இணைந்தார். ஜனதா கட்சியையும் அவர் பாரதிய ஜனதாவுடன் இணைந்துள்ளார்.
      டெல்லியில் பாரதிய ஜனதா கட்சி தலைவர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த சுப்பரமணியன் சாமி முறைப்படி தம்மை அக்கட்சியில் இணைத்துக் கொண்டார். ஜனதா கட்சி, பாரதிய ஜனதாவுடன் இணைந்திருப்பது பாரதிய ஜனதாவிற்கு மேலும் வலுசேர்க்கும் என்று ராஜ்நாத் தெரிவித்தார்.