லாலுபிரசாத் மீதான ஊழல்வழக்கில் இன்றுதீர்ப்பு

Pasumai Nayagan

      பீகார் மாநில முன்னாள் முதல்வர் லாலுபிரசாத் யாதவ் மீதான கால்நடை தீவன ஊழல் வழக்கின் தீர்ப்பு இன்று வெளியிடப்பட உள்ளது.
ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரதாச்யாதவ் உள்ளிட்ட 45 பேர் மீதான இந்த வழக்கின் தீர்ப்பினை ராஞ்சி சிபிஐ நீதிமன்றம் விசாரித்து வந்நது.
   கடந்த 1990 ஆம் ஆண்டு லாலு பிரசாத் யாதவ் முதலமைச்சராக இருந்தபோது, போலி ரசீதுகள் தாக்கல் செய்து 37 புள்ளி 7 கோடி ரூபாய் அளவிற்கு கால்நடை தீவன ஊழல் செய்ததாக வழக்கு தொடரப்பட்டது.
அதன் தீர்ப்பு இன்று வெளியாக உள்ள நிலையில் லாலுபிரசாத் தனது மகனுடன் ராஞ்சியில் முகாமிட்டுள்ளார்.
2 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெறும் எம்.பி. எம்.எல்.ஏக்கள் பதவி நீக்கம் தொடர்பான அவசர சட்டம் குடியரசு தலைவரின் ஒப்புதல் பெறாத நிலையில் இந்த தீர்ப்பு தேசிய அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.


நரிக்குறவர்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும்

     
 ஆயிரக்கணக்கான சிறு சமூகக் குழுக்கள் நமது நாட்டில் அடையாளமில்லாமல் விளிம்புக்குத் தள்ளப்பட்டுக் குன்றிப்போய்க் கிடக்கின்றன. அவற்றில் ஒன்றுதான் நரிக்குறவர் சமூகம்.


நரிக்குறவர்கள் 'வாக்ரிவாலா' என்று அறியப்படுகிறார்கள். குருவிக்காரர்கள் என்ற பெயரும் அவர்களுக்கு உண்டு. 


      நரிக்குறவர்களைப் பார்க்கிற நாம் அவர்களைப் பழங்குடியின சமூகத்தினர் என்றுதான் எண்ணியிருப்போம். ஆனால், தமிழ்நாட்டில் நரிக்குறவர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் வகைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்!!!!. அந்தப் பட்டியலில் இருபத்து நான்காவதாக அவர்களது சாதி குறிப்பிடப்பட்டிருக்கிறதுமராத்தி கலந்த மொழியைப் பேசும் நரிக்குறவர்கள் எப்படித் தோன்றினார்கள் என்று பல்வேறு புராணக் கதைகள் இருக்கின்றன. 

   தமிழ்நாட்டில் மட்டுமின்றி நரிக்குறவர்கள் வெவ்வேறு பெயர்களில் ஆந்திரா, குஜராத், ஹரியானா, மத்தியப் பிரதேசம், கர்னாடகா முதலிய மாநிலங்களிலும் வாழ்ந்து வருகிறார்கள். அங்கெல்லாம் அவர்கள் பழங்குடி இனத்தவராகவே கருதப்படுகிறார்கள். . ஆனால், தமிழ்நாட்டில்தான் அவர்களை மிகவும் பிற்பட்டோர் பட்டியலில் வைத்திருக்கிறோம்.


      நரிக்குறவர்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று ஏற்கனவே பலமுறை தமிழக அரசின் சார்பில் முயற்சி செய்யப்பட்டிருக்கிறது.1964ஆம்ஆண்டிலேயே மத்திய அரசு கொள்கையளவில் நரிக்குறவர்களைப் பழங்குடியினராக ஏற்றுக்கொண்டுவிட்டது. அதனடிப்படையில் தமிழ்நாட்டில் அவர்களுக்குப் பழங்குடியினருக்கான சலுகைகள் 1974ஆம் ஆண்டுவரை அளிக்கப்பட்டன. 

2
V.R. Nedunchezhiyan(acting)[19]3 February 196910 February 19691DMK
3M. KarunanidhiKarunanidhi.jpg10 February 19694 January 19711DMK
4M. Karunanidhi15 March 197131 January 19762DMK1971 State assembly election
President's rule[19]31 January 197630 June 1977
    ஆனால், அவர்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து முறையாக அறிவிப்பு செய்வதற்கு முன்பு இப்படிச் சலுகைகளைத் தரக் கூடாது என மத்திய அரசு 1974ஆம் ஆண்டில் தமிழக அரசுக்குக் கடிதம் எழுதிய காரணத்தால் அப்போதிருந்த அரசு அவர்களைப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் தற்காலிகமாகச் சேர்த்து உத்தரவிட்டது. ஆனால், படிப்பு உதவித்தொகை, மனைப்பட்டா, அடிப்படை வசதிகள் ஆகியவற்றைப் பெறுகின்ற விஷயத்தில் அவர்கள் தொடர்ந்து பழங்குடியினருக்கான சலுகைகளைப் பெறுவார்கள் என்றும் அந்த ஆணையில் தெரிவிக்கப்பட்டது. இப்படி 1975ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் செய்யப்பட்ட அந்தத் 'தற்காலிக ஏற்பாடு'தான் கடந்த முப்பத்து இரண்டு ஆண்டுகளாகத் தொடர்ந்துகொண்டிருக்கிறது. இதனால் பலவிதங்களில் நரிக்குறவர்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்...தற்போதாவது அவர்களுக்கு ஒரு நல்ல விடிவுக்காலம் பிறக்கட்டும்.....  
                                                               -நன்றி திரு.ரவிக்குமார் 
                                                                                -பசுமை நாயகன்