குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை, பிரதமர் மன்மோகன் சிங் சந்திப்பு

குடியரபிரதமர் மன்மோகன் சிங் சந்திப்பு

www.thagavalthalam.com

      குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை, பிரதமர் மன்மோகன் சிங் இன்று சந்தித்துப் பேசினார். குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது, எம்.பி., எம்.எல்.ஏ.க்களை பாதுகாக்கும் அவசர சட்டத்தை திரும்பப் பெற்றுக் கொள்வதாக பிரணாப்பிடம் மன்மோகன் சிங் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

அந்த சட்டத்தை திரும்பப் பெறும், காங்கிரஸ் உயர்மட்ட குழுவின் முடிவையும், அப்போது எடுத்துரைத்ததாக தெரிகிறது. குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பெல்ஜியம் மற்றும் துருக்கி நாடுகளுக்கு இன்று பயணம் மேற்கொள்ள உள்ளதால், அதற்கு முன்னதாக அவரை, பிரதமர் மன்மோகன் சிங் சந்தித்து பேசியுள்ளார். அமெரிக்க சுற்றுப் பயணத்தின் போது அதிபர் ஒபாமா உள்ளிட்ட தலைவர்கள் உடனாக சந்திப்பின்போது பேசிய அம்சங்கள் பற்றியும் விளக்கியுள்ளார்.

           குடியரசுத் தலைவர் உடனான சந்திப்பைத் தொடர்ந்து, மாலையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் கூட்டமும், மத்திய அமைச்சரவைக் கூட்டமும் நடைபெறவுள்ளது. இதில், அவசரச் சட்டம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டு, அந்த சட்டத்தை வாபஸ் பெறுவதா அல்லதி அமல்படுத்துவதா என்பது குறித்து முடிவு எடுக்கப்படவுள்ளது.

       முன்னதாக அமெரிக்க சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய பிரதமர் மன்மோகன் சிங்கை, இன்று காலை அவரது இல்லத்தில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி சந்தித்து பேசினார். முப்பது நிமிடம் நீடித்த இந்த சந்திப்பின் போது, அவசர சட்டத்தை திரும்பப் பெறுமாறு ராகுல் வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.


அவசரச் சட்டம் தொடர்பாக ராகுல்காந்தி-பிரதமர் சந்திப்பு

thagavalthalam


     குற்றவழக்குகளில் தண்டனை பெற்ற மக்கள் பிரதிநிதிகள் பதவி இழப்பதை தடுக்கும் அவசரச் சட்டம் தொடர்பாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மன்மோகன்சிங்கை இன்று சந்தித்துப் பேசினார். இதனை தொடர்ந்து குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியை பிரதமர் சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளார்.
பிரதமர் மன்மோகன் சிங் அமெரிக்கா சென்றிருந்த நிலையில், தண்டனை பெற்ற எம்பி., எம்எல்ஏக்கள் பதவி இழப்பதை தடுக்கும் அவசரச்சட்டத்தை கிழித்தெறிய வேண்டும் என காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி கூறிய கருத்து கடும் சர்ச்சைக்கும் எதிர்கட்சிகளின் விமர்சனத்திற்கும் ஆளானது.
    அவசரச் சட்டத்தை திரும்பப் பெறுவது குறித்து அமைச்சரவையில் இன்று முடிவு எடுக்கப்பட உள்ள நிலையில், இதுதொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கை, ராகுல் காந்தி சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளார்.
ஆனால் அவரச் சட்டத்தில் கையெழுத்திடாத குடியரசு தலைவர் பாராட்டிற்குரியவர் என்று கூறியுள்ள பாரதிய ஜனதா கட்சி இப்பிரச்சனையில் ராகுல் காந்தியின் அனுபவமின்மை வெளிபட்டுவிட்டதாக தெரிவித்துள்ளது.
    குற்றவழக்குகளில் தண்டணை பெற்ற மக்கள் பிரதிநிதிகளின் பதவியை பறிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.ஆனால் அதற்கு எதிரான அவசரச் சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்பதல் அளித்தது.இந்த சட்டம் குறித்து மத்திய அரசு இன்று இறுதி முடிவு எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.