தெலுங்கானா விவகாரம்: ஆந்திரமுதலமைச்சர் அவசரக்கூட்டம்
thagavalthalam


  தெலுங்கானா மாநிலம் உருவாக்கத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதையடுத்து ஆந்திர முதலமைச்சர் கிரண்குமார் ரெட்டி இன்று அவசர ஆலோசனைக் கூட்டத்தை கூட்டுகிறார்.
ஆந்திர கடலோர மற்றும் சீமாந்திரா பகுதி அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் இதில் கலந்து கொள்ளவுள்ளனர்.
மத்திய அமைச்சரவையின் முடிவைத் தொடர்ந்து அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து இதில் விவாதிக்கப்பட இருக்கிறது.
முன்னதாக அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் முதலமைச்சர் கிரண் குமார் ரெட்டியை நேரில் சந்தித்து, மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.