நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடரில்  சில்லறை வர்த்தகத்தில் 
அந்நிய நேரடி முதலீடு விவகாரத்திற்கு கூடுதல்  முக்கியத்துவம் கொடுக்கப் 
போவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  தெரிவித்துள்ளது.
டெல்லியில் பேசிய அக்கட்சியின் மூத்த தலைவர் பாசுதேவ்  ஆச்சார்யா, 
சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி  அளிக்கும் 
மத்திய அரசின் முடிவை எதிர்த்து ஒத்தி வைப்புத் தீர்மானம் கொண்டு  
வரப்படும் என்றார். இதுதவிர, நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு முறைகேடு,  
பெட்ரோல் – டீசல் விலை உயர்வு, சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வத்ரா  
மீதான குற்றச்சாட்டுகள் ஆகியவற்றையும் எழுப்பப் போவதாக தெரிவித்தார்.
நாடாளுமன்ற குளிர் காலக் கூட்டத்தொடரில் கடைபிடிக்க வேண்டிய அணுகுமுறை  
குறித்து இடதுசாரி தலைவர்கள் வரும் 16ம் தேதி டெல்லியில் கூடி முடிவு  
செய்வார்கள் என்றும் பாசுதேவ் ஆச்சார்யா தெரிவித்தார்.
