சிவசேனா கட்சி தலைவர் பால் தாக்கரே (86) நேற்று மாரடைப்பால் காலமானார்.
சுவாச கோளாறு காரணமாக அவதியுற்று வந்த அவருக்கு மும்பையில் உள்ள அவரது
இல்லமான மட்டோஸ்ரீயில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. நேற்று பிற்பகல்
3.33 மணி அளவில் பால் தாக்கரேவின் உயிர் பிரிந்ததாக அவருக்கு சிகிச்சை
அளித்து வந்த மருத்துவர் ஜலீல் பார்க்கர் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து அங்கு ஏராளமான சிவசேனா தொண்டர்கள் குவிந்தனர். மும்பை
நகரம் முழுவதும் 20,000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பால் தாக்கரேவின்
மரணத்தை அடுத்து மும்பையின் பலஇடங்களில் கடைகள் அடைக்கப்பட்டன. நாடு
முழுவதும் உள்ள சிவசேனா கட்சித் தொண்டர்கள் அமைதி காக்க பால்தாக்கரேவின்
மகன் உத்தவ் தாக்கரே வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பொதுமக்களின் அஞ்சலிக்காக பால் தாக்கரேவின் உடல் மும்பை சிவாஜி
பார்க்கில் வைப்பதற்காக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பப்பட்டு வருகிறது.
மும்பையில் உள்ள சிவாஜி பூங்காவில் இறுதிச் சடங்கு நடைபெற உள்ளது.