சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே குழுவில் இருந்து பிரிந்த அர்விந்த் கெஜ்ரிவால், தனது புதிய கட்சிக்கு ஆம் ஆத்மி என பெயர் சூட்டியுள்ளார். 
டெல்லியில் இன்று நடைபெற்ற கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தில் இந்த 
பெயர் முன்மொழியப்பட்டு அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த தகவலை 
செய்தியாளர்களிடம் தெரிவித்த அவர், சாதாரண மக்களே தமது கட்சியை 
உருவாக்கியதாக கூறினார். 
அரசின் ஊழல் மற்றும் விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்ட மக்களின் 
பிரச்சனைகளுக்கு ஆம் ஆத்மி கட்சி தீர்வை ஏற்படுத்தும் என அவர் 
உறுதியளித்தார். கட்சியின் சார்பில் புதிய குழுக்களை ஏற்படுத்தி நாடு 
முழுவதும் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படும் என கெஜ்ரிவால் தெரிவித்தார். 
புதிய கட்சியின் பெயர் சூட்டு விழா அரங்கிற்குள் தமிழகத்திலிருந்து சென்ற 
பிரதிநிதிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 
இதையடுத்து அவர்கள் கட்சியின் ஒருங்கிணைப்பாளரிடம் வாக்குவாதத்தில் 
ஈடுபட்டனர். இதனால் விழா அரங்கிற்கு வெளியே பரபரப்பு ஏற்பட்டது. 
இந்நிலையில் ஆம் ஆத்மி என்பது தங்களது ஸ்லோகன் என தெரிவித்துள்ள காங்கிரஸ் 
கட்சி, புதிய பெயரை அர்விந்த் கெஜ்ரிவால் திரும்ப பெற வேண்டும் என 
வலியுறுத்தியுள்ளது.
-பசுமை நாயகன் 
