மத்திய அரசு அமைக்க உள்ள தேசிய முதலீட்டு வாரியம் மிகப்பெரிய தொழில் 
முதலீட்டு திட்டங்களை கண்காணிப்பதுடன் சம்மந்தப்பட்ட அமைச்சகங்களுக்கு 
அறிவுரைகளையும் வழங்கும் என மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் 
தெரிவித்துள்ளார்.
நேற்று நாடாளுமன்றத்தில் அவர் அளித்த பதிலில் ஆயிரம் கோடி ரூபாய்க்கும் 
அதிகமான மதிப்புள்ள திட்டங்கள் தேசிய முதலீட்டு வாரியத்தின் கீழ் வரும் 
என்று தெரிவித்தார். தற்போது ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான 100க்கும் 
அதிகமான முதலீட்டு திட்டங்கள் பல்வேறு காரணங்களால் தாமதமாகி வருவதாக 
சிதம்பரம் கூறியுள்ளார். இதுபோன்ற, முதலீட்டு வாரியங்கள் ஜப்பான், 
தாய்லாந்து, மலேசியா போன்ற நாடுகளில் உள்ளதாகவும், அங்கு இவை நல்ல 
பலன்தந்து வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். தேசிய முதலீட்டு வாரியம் 
குறித்த அமைச்சரவை குறிப்பு இப்போது சம்மந்தப்பட்ட அமைச்சகங்களின் 
பார்வைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் சிதம்பரம் தெரிவித்தார். அதிக 
அதிகாரங்களுடன் கூடிய தேசிய முதலீட்டு வாரியம் அமைக்கப்படுவதற்கு 
சுற்றுச்சூழல் அமைச்சகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது
