பிரதமர் மோடி சொந்த நாட்டில் நடைபெற்று வரும் காவிரி பிரச்சனையை கண்டு கொள்ளவில்லை

mahendran thagavalthalam

         நாடு நாடாக பறந்து சென்று கொண்டிருக்கும் பிரதமர் மோடி சொந்த நாட்டில் நடைபெற்று வரும் காவிரி பிரச்சனையை கண்டு கொள்ளவில்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் சி. மகேந்திரன் பிரதமர் மீது குற்றம்சாட்டியுள்ளார். கர்நாடகத்தில் தமிழர் மீதான தாக்குதலை கண்டித்து தமிழகத்தில் நடைபெற்று வரும் முழு அடைப்பு போராட்டம் வெற்றிகரமாக நடந்து வருகிறது. இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட சி. மகேந்திரன் தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசு போது, நாடு நாடாக விமானத்தில் பறந்து செல்லும் பிரதமர் மோடி சொந்த நாட்டில் நடைபெற்று வரும் காவிரி பிரச்சனையை கண்டுகொள்ளவில்லை என்று குற்றம் சாட்டினார்.

       மேலும், தமிழக முதல்வர் ஜெயலலிதா இந்த விவகாரம் குறித்து வெறும் கடிதம் மட்டுமே எழுதிக் கொண்டிருந்தால் தீர்வு கிடைக்காது என்றும் போராட்டக்காரர்கள் மீது அடக்குமுறையை ஏவியுள்ள தமிழக அரசுக்கு கண்டனத்தையும் சி.மகேந்திரன் தெரிவித்துள்ளார்.