2ஜி விவகாரத்தில் தி.மு.க செய்த தவறுக்கு காங்கிரசும் சேர்ந்தே அவமானப்பட்டது" என்று சுதர்சன நாச்சியப்பன் கூறினார்.
சென்னையில் நடைபெற்ற தி.மு.க. பொதுக்குழுவில் பேசிய தி.மு.க. தலைவர் கருணாநிதி, 2ஜி விவகாரத்தில் ஆ.ராசா மற்றும் கனிமொழி உள்ளிட்டோரை பலிகடா ஆக்கிவிட்டு தப்பித்துக் கொண்டார்கள் என காங்கிரஸ் மீது குற்றம்சாட்டியிருந்தார்.இது குறித்து கருத்து தெரிவித்த மத்திய இணை அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் கூறியபோது, 2 ஜி விவகாரத்தில் தி.மு.க செய்த தவறுக்கு காங்கிரசும் சேர்ந்தே அவமானப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.மேலும் 2ஜி ஏலத்தில் பிரதமர் சொல்லியும் தெரிந்தே ஆ.ராசா தவறு செய்தார் என கூறினார்.