தமிழகத்தில் விவசாய நிலப்பரப்பு 1.6 சதவீதம் குறைந்துள்ளதாக அமைச்சர் தாமோதரன் தெரிவித்துள்ளார்


பசுமைநாயகன் Pasumai4U

      தமிழகத்தில் விவசாய நிலப்பரப்பு குறைந்துவிட்டதாக வேளாண் துறை அமைச்சர் தாமோதரன் தெரிவித்துள்ளார். வேளாண் வளர்ச்சிக்கு உதவும் தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கும் மண்டல வேளாண்மை பெருவிழா, தூத்துக்குடி மாவட்டம் கிள்ளிகுளம் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெற்றது.
        இதில் பேசிய அமைச்சர் தாமேதரன், ரசாயன உரங்களை தேவைக்கு ஏற்பவும், தேவைக்கு அதிகமாகவும் இடுவதால் மண்வளம் கெடுகிறது என்றார். இதனால் ஏற்படும் மகசூல் இழப்பை தடுக்க ஆறு கோடி ரூபாய் நிதி மதிப்பீட்டில் மாநிலத்திலுள்ள அனைத்து பகுதிகளிலும், புவி விபரங்களின் அடிப்படையில் மண் வரைபடங்களை கணினி மூலமாக பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தாமோதரன் கூறினார்.
       தமிழகத்தில் விவசாய நிலப்பரப்பு 1.6 சதவீதம் குறைந்துள்ளதாக தெரிவித்த அவர், குறைந்த நிலப்பரப்பில் அதிக விவசாயம் செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
தமிழகத்தில் சிறுதானியங்களின் உற்பத்தி குறைந்துவிட்ட காரணத்தினால் இன்றுள்ள இளைய தலைமுறையினருக்கு நீரிழிவு உள்ளிட்ட நோய்கள் ஏற்படுவதாகவும் அமைச்சர் தாமோதரன் கூறினார்.