அவதூறு வழக்கு: ஊட்டி நீதிமன்றத்தில் விஜயகாந்த் ஆஜர்

        தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை அவதூறாகப் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஊட்டி நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார்.
ஊட்டியில் நடைபெற்ற பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பேசிய விஜயகாந்த், முதலமைச்சர் ஜெயலலிதாவை அவதூறாகப் பேசியதாக நீலகிரி மாவட்ட அரசு குற்றவியல் வழக்கறிஞர் அனந்தகிருஷ்ணன் ஊட்டி நீதிமன்றத்தில் ஏற்கனவே வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கில் இன்று நேரில் ஆஜராகுமாறு விஜயகாந்துக்கு நீதிபதி பிரேம்குமார் உத்தரவிட்டார். இதையடுத்து ஊட்டி நீதிமன்றத்தில் விஜயகாந்த் ஆஜரானார்.