காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை வெளியிடக் கூடாது:தேவகௌடா வலியுறுத்தல்


        காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிடக் கூடாது என்று மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேவகெளடா, பிரதமர் மன்மோகன் சிங்கை இன்று நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.
பிரதமர் மன்மோகன் சிங்கை அவரது இல்லத்தில் தேவகெளடா சந்தித்துப் பேசினார். அப்போது, கர்நாடகாவில் குடிநீர் பற்றாக்குறை நிலவுவதாகவும், எனவே தமிழகத்தின் கோரிக்கையை ஏற்கக் கூடாது என்றும், அவர் வலியுறுத்தினார்.
தேவகெளடாவின் கருத்துகளை பிரதமர் மன்மோகன் சிங், கவனத்துடன் கேட்டுக் கொண்டதாக மதச்சார்பற்ற ஜனதா தளத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், தேவகெளடாவிடம் பிரதமர் எந்தவித உறுதிமொழியையும் தரவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு குறித்த நிலைப்பாட்டை தெரிவிக்க காவிரி கண்காணப்பு குழுவிடம், கர்நாடகா ஒருவார காலம் அவகாசம் கேட்டுள்ளது.
                                     -இணைய செய்தியாளர் - s.குருஜி