கர்நாடக புதிய முதல்வராக சித்தராமையா


   கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ள சித்தராமையா நாளை மறுநாள் பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெங்களூருவில் நடைபெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில், கட்சியின் சட்டமன்றத் தலைவராக அவரைத் தேர்வு செய்வது என முடிவெடுக்கப்பட்டது.
காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் ஒருமித்த ஆதரவுடன் அவர் முதலமைச்சர் பொறுப்புக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த 5-ஆம் தேதி நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மைசூர் அருகேயுள்ள வருணா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனிடையே ஆளுநர் பரத்வாஜை சந்தித்த மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வர், ஆட்சியமைக்க உரிமை கோரினார்.